மே 13, சென்னை (Chennai): தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 11th Result) நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது. Go Glam Sales Fair: கோடை கால விடுமுறையை முன்னிட்டு கோ கிளாம் விற்பனை கண்காட்சி.. கோவை மக்கள் மகிழ்ச்சி..!

https://results.digilocker.gov.in/ www.tnresults.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.