Gold Rate Today in Chennai (Photo Credit : Team LatestLY)

செப்டம்பர் 18, சென்னை (Gold Price Today): தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். Gold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு.. வெள்ளி விலையும் சரிவு.. விலை நிலவரம் உள்ளே.!

தங்கம் விலை உயர்வு:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ரூ.81 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட சவரன் தங்கம் விலை மூன்று நாட்களாக மாறாமல் இருந்தது. நேற்று விலை அதிரடியாக குறைந்தது.

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது. இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, கிராம் தங்கம் ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.141க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,41,000க்கு விற்பனையாகிறது.