மார்ச் 28, திருப்பூர் (Tirupur News): கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் இருந்து பல்லடம் வழியாக மதுரைக்கு இன்று அதிகாலை ஆம்னி பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில், 46 பயணிகளை ஏற்றிக் கொண்டு, மதுரையைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 36) என்பவர் பேருந்தை இயக்கி வந்துள்ளார். Elderman Arrested In POCSO Act: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் போக்சோ சட்டத்தில் கைது..!
இந்நிலையில், பல்லடம் அண்ணாநகர் பகுதியில் திருச்சி-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH 81 Trichy-Coimbatore National Highway) செல்லும் போது, எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்புகளில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதிவேகமாக சென்றதால், பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் சத்தம் போட்டு கத்தினர். விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக, பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு, பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், 36 பேருக்கு லேசான காயங்களுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தினால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.