ஆகஸ்ட் 08, விருத்தாசலம் (Cuddalore News): கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே எருமனூர் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக (School Headmaster) கடலூரை சேர்ந்த எடில் பெர்ட் பெலிக்ஸ் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு படித்த மாணவி ஒருவருடன் முத்தம் கொடுப்பது போல், போட்டோ ஒன்றை தனது செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 07) அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. Chennai Shocker: ஆன்லைன் ரம்மி விளையாட்டு; 51 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை..!
இதனைப்பார்த்த அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் ஆத்திரமடைந்து, நேற்று மாலை பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி அவரது ஆடைகளை கிழித்து, அரை நிர்வாணமாக வெளியே இழுத்து வந்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம்வரை அவரை அடித்து தாக்கி இழுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் தலைமை ஆசிரியரை மீட்டு, பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சென்றனர்.
இதனைத்தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து விருத்தாசலம்-எருமனூர் (Virudhachalam To Erumanur) சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் அவர்களிடம் சமாதானம் பேசி இன்று (ஆகஸ்ட் 08) கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக கூறிய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸை விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.