Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 10, நாகப்பட்டினம் (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 59 வயதுமிக்க பெண் ஒருவர், வாரந்தோறும் பாப்பாகோவில் பகுதியில் அமைந்துள்ள தர்காவுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதன்படி சம்பவ நாளன்று தர்காவுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவுக்கு காத்திருந்துள்ளார். Mochai Kottai Karakulambu Recipe: சுவையான மொச்சை கொட்டை காரக்குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் தான் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, அந்த பெண்ணை நம்ப வைத்து கூட்டிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், அந்த பெண்ணிடம் பாலியல் (Sexual Harassment) ரீதியிலான முறையில் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், புதுச்சேரி மெயின் ரோடு அருகே சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்துள்ளார். இதனையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பெரிய நரியங்குடி பகுதியை சேர்ந்த சலூன் கடைக்காரர் குமரவேல் (வயது 36) என்பது தெரியவந்தது. நேற்று சிக்கல் கடைத்தெருவில் நின்றுக் கொண்டிருக்கும்போது, தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.