Summer Weather Report (Photo Credit: Team LatestLY) (3)

மார்ச் 05, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை எதுவும் பதிவாகவில்லை. வெப்பநிலை அதிகபட்சமாக திருப்பத்தூரில் 37.4 டிகிரி செல்சியஸ்‌ வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ 34-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ 31-35 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. வானிலை: வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்..!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், இன்றும் நாளையும் (06-03-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 07-03-2025 முதல் 09-03-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 10 மற்றும் 11ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (05-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (06-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.