Summer Weather Report (Photo Credit: Team LatestLY)

மார்ச் 07, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை எதுவும் பதிவாகவில்லை. வெப்பநிலை அதிகபட்சமாக ஈரோட்டில் 39.2 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியல் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ 35-39 டிகிரி செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ 32-38 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. வானிலை: கொளுத்தும் வெயில்.. வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் அலர்ட்..!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், இன்றும் நாளையும் (08-03-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 09-03-2025 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 10-03-2025 அன்று, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

11-03-2025 அன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-03-2025 மற்றும் 13-03-2025 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 09ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (07-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (08-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதிகள்:

07-03-2025 முதல் 10-03-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. 11-03-2025 தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வங்கக்கடல் பகுதிகள்:

07-03-2025 முதல் 10-03-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. 11-03-2025 தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல் பகுதிகள்:

எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.