Arrest | Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 15, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல்நிலையத்தில் திருநாவுக்கரசு என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை (Sexual Harassment) செய்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. Sikandar Raza Talked About Defeats: மோசமான தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்.. சிக்கந்தர் ராசா வேதனை..!

இதனையடுத்து மயிலாடுதுறை குழந்தைகள் நல பாதுகாப்பு (Child Welfare Protection) அலுவலர், பெரம்பூர் காவல்நிலையத்தில் காவலர் திருநாவுக்கரசு மீது புகார் கொடுத்தார். புகாரின்பேரில், பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இதனைத்தொடர்ந்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலர் திருநாவுக்கரசை சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காவலர் திருநாவுக்கரசுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.