மார்ச் 13, சென்னை (Chennai News): தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது. Family Dies By Suicide: மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீத முடிவு..!
முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு:
அதேபோல், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் 3ஆம் பருவத் தேர்வு அட்டவணையை (Annual Exam Schedule 2025) பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதேபோல், 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3ஆம் பருவத்தேர்வுகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத்தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.