ஏப்ரல் 16, சென்னை (Chennai): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Pay To Tweet: எக்ஸ் தளத்தில் புதிதாக சேர போறீங்களா.. அப்போ இனி ஒவ்வொரு பதிவுக்கும் கட்டணம்..!
தொடர்ந்து தமிழகத்தில் தபால் வாக்கு பெறும் நடவடிக்கையானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மற்றும் 85 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள் தபால் வாக்குகள் அளிக்க தகுதி உடையவர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இவர்களது தபால் வாக்குகளை பெறுவதற்காக அவர்களின் வீடுகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக சென்று வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு இன்று மாலை 5 மணியுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. எனவே தபால் வாக்குகள் செலுத்தாதவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.