Train (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 09, சென்னை (Chennai News): பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க தாம்பரம் மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவு இல்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி இன்று இயக்கப்படும் மெமு ரயில் (எண். 06007) தாம்பரத்தில் இருந்து இரவு 11:00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6:40 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும். மீண்டும், ரயில் (எண். 06008) திருச்சிராப்பள்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு 10:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5:50 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். Air India Cancels All flights to Tel Aviv: விமான பயணம் செய்யவுள்ளோர் கவனத்திற்கு.. ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் முழுவதும் முன்பதிவில்லாத ரயில் ஆகும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.