அக்டோபர் 30, டெல்லி (Technology News): இந்தியாவில் பலர் சாம்சங் ஸ்மார்ட்போன்களைப் (Samsung Smartphones) பயன்படுத்தி வருகின்றனர். சாம்சங்கில் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஆன்ட்ராய்டு போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு சாம்சங் போன்கள் பிடிக்கும். சாம்சங் தனது பயனர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு, அவ்வப்போது தனது போன்களின் மென்பொருளை அப்டேட் (Software Update) செய்கிறது. WhatsApp Update: இனி வாட்ஸ்அப்பில் ஆன்லைன் மோசடிக்கு சாத்தியமில்லை.. வருகிறது புதிய அப்டேட்.!
இந்நிலையில், சாம்சங் போன்களில் ஒரு பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக பயனர்களின் போன்கள் ஹேக் செய்யப்படலாம். எனவே, இதுகுறித்து இந்திய அரசு மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சில சாம்சங் போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக இந்திய அரசின் CERT அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், ஹேக்கர்கள் (Hackers) போனில் உள்ள தரவுகளை தெரிந்துகொள்ள உதவுகிறது. சாம்சங்கில் குறிப்பிட்ட மாடல்கள் மற்றும் கேலக்ஸி வாட்சில் பயன்படுத்தப்படும் Exynos 9820, 9825, 980, 990, 850 மற்றும் W920 செயலிகளைக் கொண்ட போன்களில் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சாம்சங் பயனர்கள் தங்கள் தொலைபேசி மென்பொருளை விரைவாக புதுப்பிக்க மத்திய அரசு எச்சரித்துள்ளது.