டிசம்பர் 23, பிரேசிலா (World News): பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் (Rio Grande do Sul) மாகாணத்தில் இருந்து சுமார் 62 பயணிகளை ஏற்றிக் கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று, சாலொ பாலோ மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, கிராமடோ நகர் அருகே விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நிலைக்குலைந்தது. விமானி நீண்டநேரமாக தரையிறக்க முயன்றார். இருப்பினும், விமானம் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் மேல் விழுந்து நொறுங்கி (Plane Crash) தீ பற்றியது. PM Modi Kuwait Visit: "43 ஆண்டுகளுக்கு பின் குவைத் மண்ணில் இந்திய பிரதமர்" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!
வீட்டின் மீது விழுந்த விமானம்:
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விமான விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானம் விழுந்து நொறுங்கிய காட்சி:
Private #plane crash in #Brazil kills pilot and his family @VoiceUpMedia1 pic.twitter.com/eksV6tYO1r
— Voiceup Media (@VoiceUpMedia1) December 23, 2024