Burkina Faso Terror (Photo Credit: @irannewsvideo X)

ஆகஸ்ட் 27, புர்கினா பாசோ (World News): மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் (Burkina Faso) ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இதனை எதிர்த்து அங்குள்ள பல்வேறு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கயாவிற்கு வடக்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்சலோகோ பகுதியில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்று, அல்-கொய்தாவுடன் (Al-Qaeda) தொடர்புடைய தீவிரவாத ஆயுதப்படை (Terrorist Attack) கும்பல் தாக்குதல் நடத்தினர். நாட்டின் எல்லை புறக்காவல் நிலையங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அகழிகளைத் தோண்டிய மக்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களையும் இராணுவ வாகனங்களையும் எடுத்துக் கொண்டனர். US Shocker: பெற்றோர், வளர்ப்பு நாய் கொடூர கொலை; 41 வயது இளைஞரை நடுரோட்டில் சுட்டுப்பிடித்த காவல்துறை.!

கொடூர தாக்குதல்:

இந்த தாக்குதலின் பின்விளைவுகளின் கொடூரமான வீடியோக்களை ஜேஎன்ஐஎம் (JNIM) வெளியிட்டதாக, செனகல் தலைநகர் டாக்கரில் இருந்து, அல் ஜசீராவின் செய்தியாளர் நிக்கோலஸ் ஹக் தெரிவித்தார். அதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் தோண்டிக் கொண்டிருந்த அதே அகழிக்குள் விழுந்துவிட்டதாகவும், அவர்களுக்கு அது புதைகுழிகளாக மாறிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களை காயாவிலிருந்து அழைத்துள்ளது.

புர்கினா பாசோ ராணுவம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி அன்றே தாக்குதல் நடக்கப் போவதை அறிந்திரிந்ததாகவும், அகழிகளை தோண்டுமாறு மக்களை ராணுவம் தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஹக் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புர்கினா பாசோவில் ஆயுதக் குழுக்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

புர்கினா பாசோ பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள்: