நவம்பர் 06, வாஷிங்டன் (World News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (US Presidental Election 2024) வாக்குப்பதிவு நேற்று (நவ.5) அமெரிக்காவில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden), பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் கடந்த தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்த, குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிட்டார்.
எலக்ட்ரல் வாக்குகள்: அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!
உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் யாருக்கும் அதிகமான மக்கள் வாக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கே அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அப்படியே வழங்கப்படும். அதாவது ஒரு மாகாணத்தில் மெஜாரிட்டி வாக்குகளை பெறும் வேட்பாளர் அந்த மாகாணத்தின் மொத்த எலக்ட்ரல் வாக்குகளையும் பெறுவார். இதன் காரணமாக தேசிய அளவில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் கூட, வெற்றிபெற முடியும். அதாவது மெஜாரிட்டி மாகாணங்களில் எலக்ட்ரல் வாக்குகளை அள்ளினால் போதும்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்ய உள்ளார் அதிபர் வேட்பாளர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப். தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 277 எலக்ட்ரல் வாக்குகளை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை வென்றுள்ளார். இதனை பாக்ஸ் நியூஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிரம்ப் இதன் மூலம் கிட்டத்தட்ட 300 மாகாணங்களை வென்று ஆட்சி அமைத்துள்ளார்.
கமலா ஹாரிஸ் தோல்வி: அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். மேலும் மற்ற மாகாணங்களிலும் முன்னிலை வகித்தார். இதனால் கமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டது. குற்றவியல் நீதி சீர்திருத்தம், குடியேற்றக் கொள்கைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்ற சிறுபான்மையினரைப் பாதிக்கும் குறிப்பிட்ட பிரச்னைகளை முழுமையாகக் கையாளாததற்காக ஹாரிஸும், நிர்வாகமும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
எல்லைப் பிரச்சனைகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள், அவரது கொள்கைகளை கடுமையானதால் அதிருப்தி உருவானது. சர்ச்சைகள் அவருக்கான ஆதரவை சிதைத்தன. சிறுபான்மையினரை ஆதரிக்கும் முற்போக்கான கொள்கைகளில் அவர் போதிய அக்கறை காட்டவில்லை. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தொற்றுநோயைத் தொடர்ந்து பொருளாதார மீட்பு சிக்கல்களால் டிரம்ப் பக்கம் வெற்றி சாய்ந்தது. இளம் வாக்காளர்கள் தங்கள் ஆதரவை இன்னும் முற்போக்கான தீர்வுகளை பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு மாற்றியுள்ளனர்.