ஜூலை 26, ஜெஜியாங் (World News): சீனாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஜெஜியாங்கைச் சேர்ந்தவர் சூ (வயது 54). இவர், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தொடர் இருமலால் (Persistent Cough) அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. Israel Palestine War: இஸ்ரேல் போர் விவகாரத்தில், அதிபர் பெஞ்சமினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க துணை அதிபர்.. காரணம் என்ன?.!
இதிலிருந்து விடுபட கடந்த ஜூன் மாதம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு, CT ஸ்கேன் (CT Scan) மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது வலது நுரையீரலுக்குள் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு கட்டி ஒன்று இருப்பது தெரியவந்தது. அது நிமோனியா அல்லது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், சூ மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து பரிசோதனையின் முடிவில், அவரது நுரையீரலில் இருந்தது மிளகாய்த் துண்டு (Chili Slice) எனத் தெரியவந்தது. இதுதான் அவருக்கு தொடர் இருமலைத் தந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் சூ மகிழ்ச்சியடைந்துள்ளார். பின்னர், அதனை மருத்துவர்கள் அகற்றினர். இதுகுறித்து சூ கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹாட்பாட் உணவைச் சமைத்தபோது தான் இந்த மிளகாய்த் தூளின் நுனி உள்ளே சென்றிருக்க வேண்டும் என கூறினார்.