Former Pakistan PM Imran Khan (Photo Credit: @MarioNawfal X)

ஜனவரி 17, இஸ்லமாபாத் (World News): பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் (Former Pakistan PM Imran Khan), பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டார். ஊழல் முறைகேடு (Land Corruption Case) அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. Gaza Ceasefire Deal: முடிவுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. காசாவில் போர்நிறுத்தம் ஒப்புதல்..!

சிறை தண்டனை:

கடந்த 2023ஆம் ஆண்டு, ஊழலை தடுக்கும் பொறுப்பு நிறுவனமான, பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB), இந்த குற்றச்சாட்டை முன் வைத்தது. இதில் முன்னாள் அதிபர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் தொழிலதிபர்கள் சிலர் மீது இந்த குற்றச்சாட்டு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 3 முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜனவரி 17) இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.