நவம்பர் 13, வாசிங்டன் (World News): அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் (US Presidential Election 2024) குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி முதல் டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவரது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது அவரது நண்பர் எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் ஆதரவாளர் .இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமிக்கு (Vivek Ramaswamy) ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புகளை வழங்கியுள்ளார். இதில், விவேக் ராமசாமி பொருளாதார தத்துவத்தை மையமாக வைத்து அரசியலில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. Sharath Jois: இந்திய வம்சாவளி யோககுரு சரத் ஜோயிஸ் காலமானார்; மலையேற்றத்தில் மாரடைப்பால் நடந்த சோகம்?.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது நண்பர் எலான் மஸ்க்கும் அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை (DOGE) தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இவர்கள் இருவரும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்தி, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள். இது நிச்சயம் அரசு நிதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும். வருகின்ற 2026-ஆம் ஆண்டு ஜூலை 04-ஆம் தேதி வரை இவர்கள் இந்த பொறுப்பில் தொடர்வார்கள்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை, வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல, பெரிய அளவிலான மறுகட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும், வெள்ளை மாளிகை, மேலாண்மை அலுவலகம் மற்றும் ஒட்டுமொத்த பட்ஜெட் தாக்கல் செய்தல் போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.