Fuel Tanker Explosion in Nigeria (Photo Credit: @urwatulwusqauk X)

அக்டோபர் 16, நைஜீரியா (World News): நைஜீரியாவின் (Nigeria) வடக்கு ஜிகாவா மாநிலத்தில், பெட்ரோல் டேங்கர் (Fuel Tanker) வெடித்ததில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். டேங்கர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அருகில் வசிக்கும் மக்கள் பலர் டேங்கரில் இருந்து எரிபொருளை சேகரிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில், பெட்ரோல் சேகரிக்கும் முயற்சியின்போது டேங்கர் திடீரென வெடித்து சிதறியதில் 90-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. உக்ரைன் பயன்படுத்தும் அமெரிக்காவின் போர் விமானம்!

இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து: