ஏப்ரல் 17, பாகிஸ்தான் (World News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். இருப்பினும் பயனர்களின் எண்ணிக்கையானது அதில் அதிகரித்துக் கொண்டே தான் வந்தது. அதுமட்டுமின்றி வெரிஃபைடு பயனாளிகளுக்கு வருமானத்தின் சில பகுதிகளை பகிர்ந்து கொடுகின்றார். இதனால் பல பயனாளர்கள் எக்ஸ தளத்தின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர். Gujarat Road Accident: குஜராத்தில் நடந்த கொடூரம்.. டேங்கர் லாரியில் மோதிய கார்.. 10 பேர் பலி..!
இப்படிப்பட்ட இணையதளத்திற்கு தற்போது பாகிஸ்தான் (Pakistan) நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளிக்காத காரணத்திற்காகவும் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த காரணத்திற்காகவும் எக்ஸ் தளமானது பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.