Rupert Murdoch-Elena Zhukova (Photo Credit: @Elijahwasike X)

ஜூன் 03, வாஷிங்டன் (World News): உலகின் முக்கியமான பிரபல மீடியா அதிபர் ரூபர்ட் முர்டோக் (Rupert Murdoch). அமெரிக்காவைச் சேர்ந்த இவர் வால் ஸ்ட்ரீட் தொடங்கிப் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்தாண்டு தான் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது காதலியான ஓய்வுபெற்ற ரஷ்ய மூலக்கூறு உயிரியலாளரான (molecular biologist) 67 வயதான எலினா ஜுகோவாவுடன் (Elena Zhukova) கலிபோர்னியாவில் உள்ள முர்டோக்கின் மொரக திராட்சைத் தோட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். முர்டாக்கிற்கு இது 5ஆவது திருமணமாகும். World Bicycle Day 2024: உலக சைக்கிள் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?.!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் போலீஸ் சேப்லைன் ஆன் லெஸ்லி ஸ்மித்துடனான முர்டோக்கின் நிச்சயதார்த்தம் திடீரென நிறுத்தப்பட்டவுடன், இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கினர். இந்த ஜோடி பல மாதங்களாக டேட்டிங் செய்து வந்தது. ரூபர்ட் மர்டோக் பாட்ரிசியா புக்கருடன் 1956 முதல் 1967 வரை, அன்னா மரியா டோர்வ் உடன் 1967 முதல் 1999 வரை, வெண்டி டெங்குடன் 1999 முதல் 2013 வரை திருமண உறவில் இருந்தார். ரூபர்ட் மர்டோக் சுமார் 17 பில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கிறார்.