அக்டோபர் 19, சியோல் (World News): உக்ரைன் - ரஷ்யாவிற்கு (Ukraine-Russia War) இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தீவிரமடைந்து வருகின்றது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்ய படைகளுடன் வடகொரிய (North Korea) ராணுவ வீரர்கள் இணைந்துள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஹமாஸ் தலைவரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்.!
தென்கொரியா குற்றச்சாட்டு:
உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டிய நிலையில், தென்கொரியா (South Korea) பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், வட கொரிய ராணுவத்தின் சிறப்புப் படை வீரர்களை, போர்க் கப்பல்கள் மூலம் ரஷ்யா தங்கள் நாட்டின் துறைமுக நகரான விளாதிவோஸ்டோகுக்கு அழைத்து வந்துள்ளது. கடந்த அக்டோபர் 08-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 1,500 வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுபோல, மேலும் பல வட கொரிய வீரர்கள் ரஷ்யாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரியா ஆதரவு:
வடகொரியா வீரர்கள் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட அவர்களுக்கு ரஷ்ய ராணுவ சீருடைகள் மற்றும் ஆயுதங்களும், போலியான ஆவணங்களும் அளிக்கப்படுகின்றன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு (Ukraine) எதிரான போரில், ரஷ்யாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வடகொரியா, போருக்கு ஆயுதங்களை வழங்குவது மட்டுமல்லாமல், தற்போது ராணுவ வீரர்களையும் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.