நவம்பர் 06, வாஷிங்க்டன் (World News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (US Presidental Election 2024) வாக்குப்பதிவு நேற்று (நவ.5) அமெரிக்காவில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden), பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் கடந்த தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்த, குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிட்டார்.
எலக்ட்ரல் வாக்குகள்: அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். Israel Palestine War: இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்.. 4 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனர்கள் பலி..!
உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் யாருக்கும் அதிகமான மக்கள் வாக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கே அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அப்படியே வழங்கப்படும். அதாவது ஒரு மாகாணத்தில் மெஜாரிட்டி வாக்குகளை பெறும் வேட்பாளர் அந்த மாகாணத்தின் மொத்த எலக்ட்ரல் வாக்குகளையும் பெறுவார். இதன் காரணமாக தேசிய அளவில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் கூட, வெற்றிபெற முடியும். அதாவது மெஜாரிட்டி மாகாணங்களில் எலக்ட்ரல் வாக்குகளை அள்ளினால் போதும்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்ய உள்ளார் அதிபர் வேட்பாளர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப். தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 277 எலக்ட்ரல் வாக்குகளை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை வென்றுள்ளார். இதனை பாக்ஸ் நியூஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிரம்ப் இதன் மூலம் கிட்டத்தட்ட 300 மாகாணங்களை வென்று ஆட்சி அமைத்துள்ளார்.
இதற்கு முன் 1936 இல் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் 531 எலக்ட்ரோ வாக்குகளில் 523 பெற்று வெற்றி பெற்றார். 1972ல் ரிக்சர் நிக்சன் 538 இல் 520 எலக்ட்ரால் வாக்குகளை பெற்றார். 1964இல் லிண்டன் பி ஜான்சன் 538 தேர்தல் வாக்குகளில் 486 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 1956 இல் துவைட் டி ஐசான் ஓவர் 531 வாக்குகளில் 457 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். வரலாற்றில் இவையெல்லாம் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கிட்டத்தட்ட இதற்கு நிகரான ஒரு வெற்றியை ட்ரம்ப் தற்போது பெற்றுள்ளார். கடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருந்தாலும் இம்முறை 226 வாக்குகளில் வெற்றியினை நழுவ விட்டார். கடந்த முறை ட்ரம்ப் 232 வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் நியூஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
BREAKING NEWS: The Fox News Decision Desk projects that Donald Trump will become the 47th President of the United States. pic.twitter.com/jQBA6Dlx1n
— Fox News (@FoxNews) November 6, 2024