டிசம்பர் 19, அமெரிக்கா (America): இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையேயான போரானது இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் கப்பல்களை தாக்கி அழிப்போம் என்று ஏமன் கிளர்ச்சிப்படையான ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து அந்த வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் அந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமான வர்த்த கப்பலையும் ஏமன் ஹவுதி அமைப்பு கைப்பற்றியது. Kanniyakumari Rain: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு.. மறைந்து போன திற்பரப்பு அருவி..!
அமெரிக்கா ஆப்ரேஷன்: இந்நிலையில் இவர்களை தடுத்து நிறுத்த அமெரிக்கா, ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் (Operation Prosperity Guardian) என்ற ஆப்ரேஷனை தொடங்கியுள்ளது. யுனைடெட் கிங்டம், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சீஷெல்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதில் இணைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார். மேலும் இந்த ஆப்ரேஷனின் குறிக்கோள், செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாக கடப்பதே என்றும் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.