மே 14, வாஷிங்டன் (World News): அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் மே மாதத்தின் ஒரு சிறப்பு நிகழ்வாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு ஸ்டாக்டன் நகரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இதில் பங்கு பெற்றனர். Husband Attacked Wife With Stone: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவியை குழவிக்கல்லால் தாக்கிய கணவர்..!

அப்போது, சிறப்பு விருந்திற்கு வந்த சிலரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் (Gun Shoot) சுட ஆரம்பித்தனர். இதன்காரணமாக, அங்கிருந்தவர்கள் பயந்து அலறியடித்து ஓடியுள்ளனர். இதில், 18 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார், மேலும், 15 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து , தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.