பிப்ரவரி 07, பலுசிஸ்தான் (Balochistan): பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிசின் என்ற நகரில் முதல் குண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகர் என்பவரின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள கான்சாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Rose Day: காதலர் வாரம் ஆரம்பம்.. முதல் நாளே ரோஸ் தினம்.. இதன் வரலாறு என்ன தெரியுமா?.!
இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா ஃசைபுல்லா நகரில் இரண்டாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பானது JUI-F கட்சி அலுவலகத்திற்கு வெளியே நிகழ்ந்தது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரு குண்டு வெடிப்புகளுக்கும் (Two bomb explosions) பின்னணியில் பாகிஸ்தான் தாலிபான் மற்றும் பலுசிஸ்தான் பிரிவினை வாத அமைப்புகள் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.