Ukraine Russia War (Photo Credit: @visegrad24 X)

மார்ச் 08, உக்ரைன் (World News): ரஷ்யா-உக்ரைன் போர் (Russia-Ukraine War) கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.  உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்து வருகின்றனர். ரஷ்யாவை எதிர்த்து போரிட ஆயுதங்களும் கொடுத்து உதவுகின்றனர். Akira Toriyama Died: 90 கிட்ஸ்களே நினைவிருக்கா?… டிராகன் பால் கார்ட்டூன் உருவாக்கியவர் மரணம்..! விபரம் உள்ளே.!

இங்கிலாந்தின் அதிரடி அறிவிப்பு: இந்நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது அவர், ரஷ்யாவிற்கு எதிராக போரிட 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். முன்னதாகவே இங்கிலாந்து அரசு டிரோன்களுக்காக 200 மில்லியன் பவுண்ட் ஒதுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது, கூடுதலாக 125 மில்லியன் பவுண்ட் ஒதுக்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது. 10 ஆயிரம் டிரோன்களில், ஆயிரம் டிரோன்கள் கப்பல்களை குறிவைத்து தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பதிலடி: ரஷ்யாவின் கப்பல்களை குறிவைத்து தாக்க இதுவரை இல்லாத அளவிற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை உக்ரைன் படைகள் தற்போது பயன்படுத்தி வருகிறது. உக்ரைன் படைகள் டிரோன் மூலம் இதுவரை ரஷ்யாவின் மூன்று போர்க்கப்பல்களை அழித்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.