ஜூலை 10, காசா (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர்.
ரஃபா தாக்குதல்: அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் மே 26 ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. Global Energy Independence Day 2024: உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம்.. இதன் முக்கியத்துவம் என்னென்ன தெரியுமா?!
பள்ளி மீது தாக்குதல்: இந்த நிலையில் காசாவில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பு உறுதி செய்தது. அந்த பள்ளி வளாகத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும் இதன் காரணமாகவே அங்குத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது.
பசியால் இறக்கும் குழந்தைகள்: இந்நிலையில் ஐ.நா வல்லுநர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலைத் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்