Prague University shooting (Photo Credit: @intelFromBrian X)

டிசம்பர் 22, ப்ராக் (Prague): ஐரோப்பிய நாடான செக் குடியரசில் (Czech Republic) தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. நேற்று 24 வயது மாணவன் டேவிட் கோசாக் கையில் துப்பாக்கியுடன் அங்கிருந்த பல்கலைக்கழகம் உள் சென்றுள்ளார். அங்கு கண்முன் இருந்த அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். Sudan Girls Ask Abortion Pill: சிறுமிகள் உட்பட 8 ஆயிரம் பெண்கள் கற்பழிப்பு; கர்ப்பத்தை தவிர்க்க கருத்தடை மாத்திரை கேட்கும் சூடான் மக்கள்.! வாழ்விடம் தேடி புலம்பெயரும் பரிதாபம்.!

24 வயது மாணவன் டேவிட் கோசாக் என்பவர்தான் இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் அவர் தனது தந்தையை கொலை செய்திருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது? இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன? டேவிட்டை தவிர வேறு யாரேனும் இதற்கு பின்னால் இருக்கிறார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறியுள்ளனர்.