குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டி மகிழும் அஜித் (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 27, சென்னை (Cinema News): கடந்த 1990ல் வெளியான என் வீடு என் கணவர் திரைப்படத்தின் மூலமாக, திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). அதனைத்தொடர்ந்து, அமராவதி, ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், நீ வருவாய் என, தீனா, சிட்டிசன், திருப்பதி, வரலாறு உட்பட பல வெற்றிப்படங்களை கொடுத்து, இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

இவரின் நடிப்புகளில் வெளியாகிய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தொடர் வெற்றியை அளித்து வருகிறது. கார் பந்தய வீரராக இருந்த அஜித்குமார், தற்போது திரைப்படங்களை முடித்துவிட்டு தனது மன அமைதிக்காகவும், பல இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலாலும் தொடர் தொலைதூர பயணங்களை மேற்கொண்டு வருகிறார். Praggnanandhaa: வெற்றியை அன்பான அம்மாவுக்கு சமர்ப்பித்த பிரக்யானந்தா; நெகிழவைக்கும் வெற்றி.! 

கடந்த 1999ல் வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நடிகை ஷாலினியுடன் (Shalini) ஏற்பட்ட காதலை தொடர்ந்து, தம்பதிகள் கடந்த 2000ம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டு, காதலுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரின் காதலுக்கு அடையாளமாக தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

அஜித்தின் நடிப்பில் அடுத்தபடியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை அஜித் குமார் 61 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஷாலினி தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் குமார் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.