Anshita Parents Emotional Moment in Bigg Boss 8 (Photo Credit: YouTube)

டிசம்பர் 27, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) வீட்டில் பதின்மூன்றாவது வாரம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பச் சுற்று நடைபெற்று வருகிறது. இந்த அதிர்ச்சியான தருணத்தில், சௌந்தரியாவின் (Soundarya) அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்தனர். உணர்ச்சிவசப்பட்டு, சௌந்தர்யா தனது குடும்பத்தினரை அரவணைத்துக்கொண்டார். பின், அவரது தந்தை இதயப்பூர்வமான அறிவுரைகளை வழங்கினார். இது அனைவருக்கும் உணர்ச்சிகரமாக அமைந்தது. Bigg Boss Tamil Season 8: "நீதான் என்னோட ஹீரோ" - அருணிடம் அன்பை பொழிந்த அர்ச்சனா ரவி.. வைரல் ப்ரோமோ இதோ.!

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு உணவளித்த அன்ஷிதா தாயார்:

மறுபுறம், அன்ஷிதாவின் தாயும் சகோதரனும் வீட்டிற்குள் நுழையும்போது அன்ஷிதா (Anshita) அழுதபடி அவர்களை கட்டிப் பிடித்தார். இதனையடுத்து, அவரது தாயார் அங்குள்ளவர்களுக்கு உணவு சமைத்து அவரது கையால் அனைவருக்கும் உணவளித்தார். குடும்பச் சுற்று அன்பையும், உணர்ச்சிகரமான பல நிகழ்வுகளையும் அளித்துள்ளது. இதன் பரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வார நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா ஜனனி, மஞ்சரி, ராணவ், விஜே விஷால், ஜெப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ஷிதா குடும்பத்தினர் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் அன்பை வெளிப்படுத்திய காணொளி: