ஜூலை 17, லண்டன் (Cinema News): பிரிட்டிஷ் ஹாலிவுட் நடிகை, பாடகி ஜேன் பிர்கின், தனது 76 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவர் இலண்டனில் பிறந்து பின்னாளில் பாரிசில் குடியேறினார்.
தனது 20 வயதில் Slogan என்ற ஆங்கில திரைப்படம் வாயிலாக திரைக்கு அறிமுகமானவர், பல படங்களில் நடித்து இருக்கிறார். அதேபோல, தனது தனித்தன்மை காரணமாக ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார். Viral Video: நடுரோட்டில் எல்லையை மீறிய காதல் ஜோடி; இருசக்கர வாகனத்தில் ஆபத்து பயணம்.! வீடியோ வைரல்.!
பிரான்ஸ் நாட்டின் பேஷன் அடையாளமாகவும் திகழ்ந்த ஜேன், Antonioni's Blowup, Kaleidoscope, Death on the Nile, Evil Under the Sun ஆகிய படத்திலும் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.
பழம்பெரும் ஹாலிவுட் நடிகையாக இருந்து வந்த ஜேனின் மறைவு திரையுலகினரை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.