Radhika & Sarathkumar (Photo Credit: Wikipedia)

செப்டம்பர் 04, மதுரை (Madurai News): மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக ஹேமா கமிட்டி (Hema Committee) ஆய்வறிக்கையில் இடப்பெற்ற முக்கிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இதனையடுத்து, மலையாள நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புகளில் இருந்து வெளியேறி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர். மேலும், முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையங்களில் அழிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டி:

இதனிடையே, தமிழ் நடிகையான ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar), மலையாள திரையுலகில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா (Hidden Camera) இருக்கும் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக நடிகை ராதிகாவும் மேற்கூறிய விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டபோது, புகார் இல்லாமல் விளக்கம் மட்டும் அளித்ததாக தெரியவருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

பாலியல் தொல்லை:

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் & சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் (Sarath Kumar), "கடந்த 2017 ம் ஆண்டு கமிட்டி உருவாக்கப்பட்டு, கமிட்டியின் வாயிலாக மலையாள திரையுலகில் நடந்த பிரச்சனைகள் கண்டறியப்பட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கையின் முதல் பதிவில், திரைப்பட பணியாளர்களுக்கு தேவையான குறைந்தபட்ச அடிப்படை தேவைகளான கழிவறை உட்பட சில வசதிகள் இல்லை என்று கூறுகிறார்கள். பின் பாலியல் தொல்லை குறித்து கூறி இருக்கிறார்கள். DSP Gayathri Attacked: பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்; விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.. பதற்றம்.!

எங்கும் இதே பிரச்சனை:

ஒரு தனி அறையில் உடை மாற்றும்போது, அதில் ரகசிய கேமிரா இருக்குமோ என்ற அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ளனர். இந்த பயத்தை சுட்டிக்காட்டி, அதனை நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பட்டுள்ளதே சாராம்சம். இந்த விவகாரத்தில் கேரளா நடிகர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பது குறித்து நாம் பொத்தாம்பொதுவாக கருத்து தெரிவிக்க இயலாது. அவை விசாரணைக்கு பின்னரே நிரூபணம் செய்யப்படும். பெண் காவலர்கள், மருத்துவர்கள், குழந்தைகள், ஐடி ஊழியர்கள் என பெண்களுக்கு பாலியல் தொல்லை எங்கும் தொடருகிறது.

எம்.ஜி.ஆர் பாடலை சுட்டிக்காட்டி பதில்:

இதற்கு காரணம் என்பதை பொறுத்தமட்டில், எனக்கு எம்.ஜி.ஆரின் பாடல் மட்டுமே நியாபகம் வருகிறது. "எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே". பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விவகாரத்தில், அவர்களுக்கு அவ்வாறான சிந்தனை வராமல் நாம் வளர்க்க வேண்டும். பெண்களுக்கு எதிரான அநீதி அனைத்து இடத்திலும் தொடருகிறது. சிலருக்கு இதனை கூற தைரியமும் இல்லை. சிலர் அதனை வேண்டாம் என மறுத்து இருக்கலாம்.

கடுமையான சட்டம் வேண்டும்:

ஒருசிலர் மனக்குமுறலை வெளிப்படுத்த இயலாமல் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடந்து அறிக்கை வெளியாகியுள்ளது. நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் வருத்தத்தை தருகிறது. குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் விரைவில் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

ட்ரம்ப் மீது கூட பாலியல் குற்றச்சாட்டு:

பெண்களுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லை விவகாரத்தில் அமைக்கப்படும் கமிட்டி, பெயரளவுக்கு செயல்படாமல் இருந்தாலே போதும். இந்த கமிட்டி அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர் உறுதி செய்யப்பட்டால், தண்டனையை வழங்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதிக்கு போட்டியிடும் ட்ரம்ப் மீது கூட பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்வதே நல்லது" என கூறினார்.