
பிப்ரவரி 17, ஹைதராபாத் (Cinema News): இன்றைய காலகட்டத்தில் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. பார்வையாளர்களை அச்சுறுத்தக்கூடிய படங்கள் மிக குறைவாகவே வெளிவருகின்றன. அந்த வகையில் முன்பு வெளியான ஒரு திகில் படத்தை பார்த்த பின்னர் பலருக்கும் மனரீதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு படத்தின் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம். இந்த படத்தை உலகின் மிக ஆபத்தான படம் என்றும் கூறுகிறார்கள். இந்த திரைப்படம் 1 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்கள் ஓடுகிறது. Kannadi Poove Lyrical Video: காதலிக்காதவரையும் காதலிக்க தூண்டும் ரெட்ரோவின் 'கண்ணாடி பூவே': சூர்யா பட பாடல் வெளியீடு.!
‘ஆன்ட்ரம் தி டெட்லிஸ்ட் பிலிம் எவர் மேட்’ (Antrum: The Deadliest Film Ever Made):
இந்த திரைப்படம் ஒரு சகோதரன் மற்றும் சகோதரி இடையிலான வாழ்க்கையை படமாக்குகிறது. இரண்டு சகோதரர்கள் தங்களது செல்ல நாயின் உயிரிழப்பால் வருத்தம் அடைகிறார்கள். அந்த நாயின் ஆன்மாவை காப்பாற்றுவதற்கு இருவரும் நரகத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். விசித்திரமான கதைக்களத்துடன் கூடிய இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. 1988 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த படம் ஒளிபரப்பாகும் போது படத்தை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு பார்வையாளர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் முதலும் கடைசியுமாக வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். ஆனால் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திரைப்படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.