Benz (Photo Credit: @Dir_Lokesh X)

அக்டோபர் 30, சென்னை (Cinema News): இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கான அறிவிப்பு க்ளிம்ப்ஸ் நேற்று வெளியானது. அதில் லோகேஷ் கனகராஜ் வெல்கம் டூ மை யுனிவர்ஸ் மாஸ்டர் என்று கூறுகிறார். Salman Khan Death Threat: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. பாலிவுட் திரையுலகமே பரபரப்பு.!

இந்த படம் எல்சியூ-வில் இணையுள்ளதாக கூறப்பட்ட வந்த நிலையில் அதனை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்து இருக்கின்றார். ஏற்கனவே இவரது யூனிவர்சில் கார்த்திக், சூர்யா, விஜய் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது ராகவா லாரன்ஸ் இணைந்திருக்கின்றார். ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ இந்த மூன்று படங்களுமே லோகேஷ் கனகராஜின் எல்சியூ (Lokesh Cinematic Universe) தொடர்புடைய படங்கள்.

'பென்ஸ்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு: