Kangana Ranaut Slapped By CISF Constable (Photo Credit: @sanjoychakra X)

ஜூன் 07, சண்டிகர் (Chandigarh News): நடிகையாக இருந்து அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளவர் கங்கனா ரனாவத் (Kangana Ranaut). நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரேதேச மாநிலம் மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்நிலையில் கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக நேற்று மாலை சண்டிகர் விமான நிலையத்துக்குச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர், கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்தார்.

காரணம்: மேலும் கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குல்விந்தர் சிங் கூறியதாவது, ‛‛விவசயிகள் 100 ரூபாய் வாங்கி கொண்டு போராட்டம் நடத்துவதாக கங்கனா ரனாவத் பேசியிருந்தார். அப்போது என் தாய் டெல்லியில் போராடி கொண்டிருந்தார். விவசாயிகளை அவமதித்ததால் கோபம் ஏற்பட்டது'' என்றார். TN Weather Report: தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

கங்கனா வீடியோ: இந்த சம்பவம் தொடர்பாக கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு நான் இரண்டாவது கேபின் வழியாகச் சென்றபோது சிஐஎஸ்எஃப் காவலராக இருந்த ஒரு பெண் என் முகத்தில் அறைந்தார். ஏன் என்ற கேட்டபோது, இது `விவசாயிகள் போராட்டத்துக்கானது' என்று அவர் கூறினார். பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. இதைச் சரிசெய்ய வேண்டும்" என்று பேசியுள்ளார்.