அக்டோபர் 24, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் வீட்டில் எல்லோருமே நடிகர்களாக இருக்கிறார்கள். அதில் இயக்குனர் பாக்கியராஜ் குடும்பத்தையும் சொல்லலாம். பாக்கியராஜ் இயக்குனராக (Director Bhagyaraj) மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் சென்னை தி.நகரில், பிரம்மா குமாரிகள் அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக உலகளாவிய கலாசாரம், அன்பு, அமைதி, நல்லிணக்கம் என்ற தலைப்பில் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். Tarzan Star Ron Ely Dies: டார்ஸான் புகழ் ஹாலிவுட் நடிகர் ரான் எலி மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்.!
அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அன்பு, அமைதி, நல்லிணக்கம் உலகத்துக்கே தேவை. சக மனிதனை நேசித்தால் போதும் எல்லாமே வந்து விடும். மனிதநேயம் இருந்தாலே போதும் ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்தும் ஒரு மனிதனுக்கு வந்துவிடும். சினிமாவில் அதிகமாக வன்முறையை காட்டுவதால் வெளியே அதிகமாக தெரிகிறது. சமூகப் பொறுப்போடு வன்முறைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து காண்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.