ஏப்ரல் 19, சிட்னி (World News): உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் காதல் வயப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் பல தொழில்நுட்பங்களை கண்டறிந்து வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கையிலும் காதல் விதிவிலக்கில்லை. மனிதன் தனது காதலை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தி துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம் காதலில் விழுவதாக ஆய்வில் சுவாரஷ்ய தகவலும் தெரியவந்துள்ளது. பெண்களை விட ஆண்கள் அதிகம் காதல் வயப்பட்டாலும், பெண்கள் ஆண்களை விட துணியை பற்றி அதிகம் கவலைகொள்கின்றனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Summer Health Tips: கோடைகாலத்தில் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டிய காய்கறிகள்.. லிஸ்ட் இதோ.!
பெண்கள் சிந்திப்பதில் நேரம் செலவிடுகின்றனர்:
ஆஸ்திரேலியாவில் உள்ள ஏஎன்யு தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வில், பீர் ரிவியூ (Peer Review) மதிப்பாய்வு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்பே காதலில் விழுகின்றனர். ஆண்கள் தங்களின் காதல் துணையின் மனதை கவர அர்ப்பணிப்பை அதிகம் காண்பிக்கின்றனர். பெண்கள் தங்களின் அன்புக்குரிய நபரின் எதிர்காலம் உட்பட பிற விஷயங்கள் குறித்து சிந்திப்பதில் அதிகம் நேரத்தை செலவிடுகின்றனர் என ஆய்வில் முடிவுகள் வந்துள்ளது.