ஏப்ரல் 25, சென்னை (Cinema News): லிங்குசாமி (Director Lingusamy) தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை என பல கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் திருப்பதி பிரதர்ஸ் (Thirupathi Brothers) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் வாயிலாக பல வெற்றிப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். அதிலும் தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினி முருகன் போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார்.

வடக்கன் டீசர்: இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள ’வடக்கன்’ (Vadakkan) என்ற திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ராமேஷ் வைத்தியா, பர்வேஸ் மெக்ரு, ஷமிரா என பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். TN Weather Report: வெப்பநிலை இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்த படத்தின் டீசர் முழுவதும், 'எங்க பாத்தாலும் வடக்கனுங்க வேலைக்கு வந்துட்டானுங்க’, ‘வடக்கனுங்கள அடிச்சு பத்தணும்; ஒருத்தன் கூட இருக்க கூடாது’, ‘வடக்கன் நாயே உன்ன கொல்லாம விடமாட்டேன்’ என வட மாநில தொழிலாளர்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாக வசனங்கள் அமைந்துள்ளது. இதன் மூலம், வடக்கன்கள் நம் வேலையை பறித்து விட்டார்கள் என்றும் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்று கூறும் ஒரு நபரின் கதை தான் இந்த ’வடக்கன்’ படத்தின் கதை என்று நமக்கு தெரிகிறது.