ஏப்ரல் 30, கலிபோர்னியா (Cinema News): 1994 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் `தி லயன் கிங்' (The Lion King). இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அந்த படமானது இரண்டு ஆஸ்கர் விருதினைப் பெற்றது. தொடர்ந்து கடந்த 2019-ல், இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக ‘தி லயன் கிங்’ ரீமேக் வெளியானது. இந்தப் படம் உலக அளவில் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது. அந்த படத்தின் கதையானது சிங்கம் சிம்பாவை சுற்றி நடக்கும். Chhattisgarh Encounter: 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளை சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

தற்போது இந்த படத்தின் முதல் லைவ்-ஆக்ஷன் பிரீகுவல் ‘முஃபஸா’வின் (Mufasa: The Lion King) டிரெய்லர் வெளியிடப்பட்டது. “இந்த கதை மலைகள் மற்றும் நிழல்களுக்கு அப்பால் ஒளியின் மறுபுறத்தில் இருந்து தொடங்குகிறது. நம் வாழ்வை மாற்றி அமைக்கும் சிங்கம்” என பின்னணியில் ஒலிக்கும் குரலுடன் டிரெய்லர் ஆரம்பமாகிறது. சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபஸாவை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.