ஜூன் 12, சென்னை (Cinema News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். மற்றொரு பக்கம் நியூராலிங்க் (Neuralink) அமைப்பின் சார்பில் மனிதர்களின் மூளையில் ஸ்டார்ட்டர் சிப் பொருத்தி, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பரிசோதனை செய்து வந்தார். அதுமட்டுமின்றி இந்த பரிசோதனையின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும், முதல் மனிதர் நியூராலிக்கை பொருத்தி, அவர் நலமுடன் இருப்பதாகவும் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருந்தார். இவர் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பல மீம்களை வெளியிடுவது வழக்கம்.
எலான் மஸ்கின் மிரட்டல் பதிவு: அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு மீம் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. அதாவது OpenAI உடனான ஆப்பிளின் புதிதாக அறிவிக்கப்பட்ட கூட்டாண்மை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் ஐபோன் தயாரிப்பாளர் ஓபன்ஏஐ இயக்க முறைமை மட்டத்தில் ஒருங்கிணைத்தால் தனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களைத் தடைசெய்வதாகவும் ஏனெனில் இது ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல் ஆகும் எனவும் கூறியுள்ளார். அந்த மீமில் அவர் தமிழ் திரைப்படத்தை பயன்படுத்தியுள்ளார். Elon Musk Threatens To Ban iPhone: ஐபோன்களுக்கு தடை.. எலான் மஸ்கின் மிரட்டல் பதிவு..!
தப்பாட்டம்: எலான் மஸ்க் பயன்படுத்திய அந்த புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’தப்பாட்டம்’ என்ற திரைப்படத்தின் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் நாயகன் சுதாகர் தனது சமூக வலைதளத்தில் ’2017 ஆம் ஆண்டு எடுத்த படம் ’தப்பாட்டம்’. இன்று உலகம் முழுவதும் இந்த புகைப்படம் பேசப்படுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எலான் மஸ்க் அவர்களுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.