மே 01, சென்னை (Cinema News): அல்லு அர்ஜுன் (Allu Arjun), ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), ஃபஹத் ஃபாசில் (Faahad Faasil), சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’ (Pushpa: The Rise). சந்தன மர கடத்தல் அதில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தை சுகுமார் (Sukumar) இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசை அமைத்திருந்தார். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. Wearable Air Conditioner: "இனி ஹெட்போன் தேவையில்லை.. கழுத்துல ஏசி போட்டுக்கோங்க.." சோனியின் வியரபில் ஏர் கண்டிஷனர் வந்தாச்சு..!

சிறிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் இந்த வரவேற்பை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இருந்த நடிகர்களுடன், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் புதிதாக இந்த படத்தில் இணைந்துள்ளனர். மேலும் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளுக்கு புஷ்பா 2 (Pushpa 2: The Rule) படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சி மற்றும் இரண்டு புஜங்களை முறுக்கி கொண்டு வரும் அல்லு அர்ஜுன் என, டீசர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியானது. மேலும் புஷ்பா 2 திரைப்படமானது வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.