மே 16, சென்னை (Chennai): தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தார். இவர் தன்னைவிட இரண்டு வயது இளைய பெண்ணான சைந்தவியை, 10ம் வகுப்பு படித்து வந்த காலத்திலிருந்தே காதலித்து வந்தார். பாடகி சைந்தவி, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷை (G.V.Prakash Kumar, Saindhavi) காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 11 ஆண்டுகளாக மிகவும் சந்தோஷமான ஜோடியாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென இருவரும் முறித்துக் கொள்வதாக இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தனர். "சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி” எனப் பகிர்ந்தனர். ஆனால், ஜி.வி.பிரகாஷின் விவாகரத்துக்கு இதுதான் காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். PM Modi Condemns Attack On Slovak PM Robert Fico: ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்..!
கடுப்பான ஜி.வி. பிரகாஷ்: இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நேற்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கு அறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2024