Ram Charan, Aishwarya Rai Bachchan, Kamal Haasan (Photo Credits: Instagram)

செப்டம்பர் 25, அபுதாபி (Cinema News): வரும் 27ம் தேதி ஐஃபா உத்சவமும் (IIFA Utsavam 2024), செப்டம்பர் 28ம் தேதி ஐஃபா விருதுகள் நிகழ்ச்சியும் செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை ஐஃபா ராக்ஸ் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் உள்ள எத்திஹாட் அரங்கில் (UAE) இந்த நிகழ்ச்சி (IIFA Awards 2024) தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஐஃபா யூடியூப் சேனலில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி டிவி, ஸ்டார் பிளஸ், கலர்ஸ் டிவி மற்றும் ஜியோ சினிமாஸ் போன்றவற்றின்மூலம் பார்க்க முடியும்.

தொகுப்பாளர்கள்: இந்த நிகழ்ச்சியை நடிகர் சித்தாந்தி சதுர்வேதி, ஸ்ட்ரீ 2 நடிகர் அபிஷேக் பானர்ஜி, பவர்ஹவுஸ் ஜோடியான ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர். மேலும் IIFA உற்சவம் 2024 இல் தெற்கு நட்சத்திரங்களான ராணா டக்குபதி மற்றும் தேஜா சஜ்ஜா தெலுங்கு பிரிவை தொகுத்து வழங்குவார்கள். அதே நேரத்தில் அகுல் பாலாஜி மற்றும் விஜய் ராகவேந்திரா கன்னட பிரிவிற்கு பொறுப்பேற்பார்கள் மலையாளப் பிரிவை போலே மானே மற்றும் சுதேவ் நாயர் தொகுத்து வழங்குவார்கள் மேலும் தமிழ் பிரிவிற்கு சதீஷ் மற்றும் திவயா மேனன் தொகுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். Pawan Kalyan: சூடுபிடிக்கும் திருப்பதி விவகாரம்! மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்.. பதிலளித்த பவன் கல்யாண்..!

கலந்துகொள்ளும் தென்னிந்திய நட்சத்திரங்களின் பட்டியல்: செப்டம்பர் 27 முதல் 29 வரை நடைபெறும் IIFA விருதுகள் மற்றும் IIFA உற்சவத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஒன்றிணைய உள்ளதால், இந்தி சினிமா மற்றும் துடிப்பான தென்னிந்திய திரைத்துறைகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவற்றையும் கௌரவிக்கும் ஒரு அற்புதமான நிகழ்வாக இது இருக்கும். இந்த நிகழ்ச்சியில் பத்ம விபூஷன் விருது பெற்ற சிரஞ்சீவி, இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படஉள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துக்கொள்ள உள்ளனர். அவர்களாவன: ராம் சரண், உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மணிரத்னம், பழம்பெரும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஆண்டவர் கமல்ஹாசன், இசை மேதை ஏ.ஆர் ரஹ்மான், வடிவமைப்பாளர் ரெசூல் பூக்குட்டி, காந்தாரத்தின் ரிஷப் ஷெட்டி, சிவகார்த்திகேயன், சிலம்பரசன், நிவின் பாலி, ரவி வாமன், தோட்டா தாணி மற்றும் எஸ்.ஜே சூர்யா, சமந்தா ரூத் பிரபு மற்றும் பலர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

ஐஐஎஃப்ஏ விருது விழா 2024:

 

View this post on Instagram

 

A post shared by IIFA Utsavam (@iifautsavam)