ஜனவரி 06, கோடம்பாக்கம் (Cinema News): கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் (Actor Vishal) நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ (Madha Gaja Raja) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது. Tamil Actor Prabhu Ganesan: நடிகர் பிரபுக்கு மூளையில் அறுவை சிகிச்சை.. தற்போதைய நிலை என்ன?!
மதகஜராஜா படத்தின் பிரஸ் மீட்:
மத கஜ ராஜா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் சுந்தர்.சி, குஷ்பு, படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை, டிடி தாெகுத்து வழங்கினார். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் படம் குறித்து பேசினார். வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் விஷால் பேசினார். அதில், “இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்” என்று பேசி கலகலப்பூட்டினார். விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார். விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலானது. பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைவு தெரிவித்து வருகிறார்கள்.
நடுநடுங்கி பேசிய விஷால்:
#Vishal sir, neenga Udamba paarunga Pls 🥹
Kastama irukku💔#MadhaGajaRaja pic.twitter.com/gXcEyV9N0v
— Mj Fan (@Mj_____Fan) January 5, 2025