மே 06, சென்னை (Cinema News): முதல் இரண்டு படங்களின் மூலம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் (Mari Selvaraj) கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். அவர் இப்போது வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்தப் படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம். இதற்கிடையே துருவ் விக்ரமை (Dhruv Vikram) வைத்து அவர் ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால் இடையில் சில காரணங்களால் அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப்போயின. OnePlus Nord CE4 Lite India Launch: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட்.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?.!

பைசன் காளமாடன்: இதனிடையே மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு ‘பைசன்’ (Bison) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் பா.ரஞ்சித், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.