மே 02, சென்னை (Cinema News): பூங்கதவே தாழ் திறவாய் என்கின்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானவர் தான் உமா ரமணன் (Singer Uma Ramanan). அந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாக அமைந்ததைத் தொடர்ந்து, இளையராஜா, கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா, எம்.எஸ் விஸ்வநாதன், வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா என அனைத்து இசையமைப்பாளர்களுடன் இணைந்து இவர் பாடல்களை பாடி இருக்கிறார் உமா ரமணன். சினிமா பாடல்கள் மட்டுமின்றி பல மேடைகளில் ஏறி பாடியுள்ளார். Earthquake in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உமாரமணன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு வயது 69. இப்படியான தருணத்தில் நேற்று உடல் நலக்குறைவால் உமாரமணன் இயற்கை எய்தினார். அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.