மே 07, சென்னை (Cinema News): கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா (Kanakalatha). இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர், பிரசாந்த் நடித்த உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி யின் இருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். KPY Bala And Lawrence Helping People: மீண்டும் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் லாரன்ஸ் கைகோர்ப்பு.. பெண்ணின் ஆட்டோ வாங்க வாங்கிய கடன்கள் அடைப்பு..!

இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கனகலதா, நேற்றிரவு திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் வீட்டிலேயே உயிரிழந்தார். அவரது உடலுக்கு மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.