ஜூன் 19, கொல்கத்தா (Kolkata News): மேற்கு வங்கத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மம்தா பானர்ஜி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் (2016-2021) பாகிபுர் ரஹ்மான் என்ற தொழிலதிபரால் ரேஷன் கடை விநியோகஸ்தர்களுக்கு அரிசி, கோதுமை கட்டாய அளவை விட குறைவாக வழங்கப்பட்டன. அதில் எஞ்சிய தானியங்கள் வெளிசந்தைகளில் லாபத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, கொல்கத்தாவில் பாகிபுர் ரஹ்மானை அமலாக்கத்துறை கைது செய்தது.
ரேசன் ஊழல் வழக்கு: இவர் அம்மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்பிரியா மாலிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் அவரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியான ஷேக் சாஜகானை அமலாக்கத் துறை கைது செய்து, அவரது வீட்டிலிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூன் 5ம் தேதி ஆஜராகுமாறு பெங்காலி நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. Trent Boult Retirement: நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஓய்வு.. ரசிகர்கள் சோகம்..!
நடிகை ரிதுபர்ணா சென்குப்தா ஆஜர்: ஜூன் 5ஆம் தேதி ரிதுபர்ணா சென்குப்தா அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை. அதன்படி, மத்திய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ரிதுபர்ணா இன்று ஆஜரானார். அமலாக்கத்துறை ஆதாரங்களின்படி, மோசடி மூலம் பெறப்பட்ட பணம் அவரது திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. எனவே இதுகுறித்து நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவிடம் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.