ஏப்ரல் 29, சென்னை (Cinema News): ‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் (Arjun Das) கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ரம்யா சுப்ரமணியம் , ரிஷிகாந்த், தான்யா, ஜிஎம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை டி.என் .ஏ இந்தப் மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. Kalams World Records Awareness Event: “பெண்கள் நாலே தேவதைகள் தான சார்..” உலக சாதனை படைத்த 100 பெண் மேக்கப் கலைஞர்கள்..!

ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வசனங்களில்லாமல் வெறும் பின்னணி இசையுடன் கடக்கிறது ட்ரெய்லர். இறுதியில் மட்டும், “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு சொல்லி கொடுத்திருக்காங்களா? சண்டையில சாவுறது தான் வீரம்” என்ற வசனத்தை பேசுகிறார் அர்ஜுன் தாஸ். அத்துடன் ட்ரெய்லர் முடிவடைகிறது.